தாம்பரத்தில் பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு

சென்னை

தாம்பரம், ஜன. 9: தாம்பரம் அடுத்த ஆனந்தபுரத்தில் தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் படி, பொது வினியோக கடைகளின் மூலம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் சிறப்பு பொங்கல் தொகுப்புடன் சேர்ந்து 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் வழங்கி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது நகர செயலாளர் கூத்தன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் எல்லார் செழியன், முன்னாள் துணை தலைவர் ஏ.கோபிநாதன், மாவட்ட பிரதிநிதி பரசுராமன், வார்டு செயலாளர் ஜீவன் ஜீவா, விஜி மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.