விஷம் குடிப்பதை பேஸ்புக்கில் லைவ் செய்த பெண்

இந்தியா

மும்பை, ஜன.9:மகாராஷ்டிராவில் தான் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதை பேஸ்புக் லைவ் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விருசாலி காம்லே. சமூக அமைப்பு ஒன்றில் பணியாற்றி வந்த இவருக்கு பாலியல் தொல்லைகளை சிலர் கொடுத்துள்ளனர்.இதனால் மனம் உடைந்த அவர் அங்கிருந்து விலகினார்.

எனினும், விரக்தி தீராததால் பேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்து தனக்கு நடந்ததை கூறி, கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். அதனை குடிக்கவும் செய்தார்.

அப்போது, அந்த லைவ் வீடியோவைப் பார்த்த சிலர் பதறிப்போய் அங்குள்ள காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து, காம்லேவின் வீட்டுச் சென்ற போலீ
சார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.