மதுரை,ஜன.10:நீதிமன்றம் அமைக்கும் குழுவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை நடத்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அறிவித்து உள்ளது

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக குழு அமைப்பதில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையெனில் தடை விதிக்க நேரிடும் என்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, காவல் ஆணையர் ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒரு மணிக்கு ஒத்திவைத்தனர். பிற்பகலில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் மதுரைக் கிளை கூறி உள்ளது.