ஒருநாள் தொடருக்கு தயாராகும் இந்திய கிரிக்கெட் அணி

விளையாட்டு

சிட்னி, ஜன.10:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நெருங்கும் நிலையில், இந்திய வீரர்கள் தோனி, தவான், கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு ஆகியோர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. இதனைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல்போட்டி நாளை மறுநாள் (12-ம் தேதி) சிட்னியில் நடக்கிறது. இதனிடையே, ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள விக்கெட் கீப்பர் தோனி, தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைந்து, சிட்னி மைதானத்தில் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.