புதுச்சேரி, ஜன.10:புதுச்சேரி கவர்னர் மாளிகையில் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற செய்திதாள்களின் தொகுப்பை பத்திரிகையாக கவர்னர் கிரண்பேடி வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-நான் ஆய்வு செய்த பின்னர் புதுச்சேரியில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஏரி, கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. மக்களின் குறைகளை நேரில் கேட்றிந்துள்ளேன். இந்த திட்டங்களை அனைத்தும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செய்துள்ளேன்.

பொங்கல் பரிசு வழங்குவது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இதற்காக கடந்த ஆண்டு புதிய சட்ட விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பொங்கல் பரிசு வழங்கப்படும். அரசின் கோப்பில் ஏழைகளுக்கு மட்டுமே வழங்க இடம் உள்ளது.

மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற்று தரப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடந்தால் தான் கூடுதலான நிதி கிடைக்கும் என்றார்.