சென்னை, ஜன. 10: வடபழனி 100 அடி ரோடு நெற்குன்றம் சாலை சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு 10.30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, குடிபோதையில் கார் ஓட்டிவந்த மாதரசன் (வயது 27) என்பவரை போலீசார் பிடித்து, காரை பறிமுதல் செய்தனர்.

இந்த காரை, வடபழனி காவல் நிலையம் அருகே மேம்பாலத்தின்கீழ் நிறுத்திவைத்திருந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் அளிக்க, அவ்வழியாக சென்ற தண்ணீர் லாரியை நிறுத்தி தீயை அணைத்தனர். இதில், காரின் முன்பகுதி சேதமடைந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.