சென்னை, ஜன.10: பேட்ட பேட்டயாக வலம்வந்தாலும் ரஜினியால் தமிழக முதல்வராக முடியாது என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர் திருநங்கை அப்சரா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்சரா கூறியதாவது: ராகுல் காந்தி, என்னை முழுமனதோடு வரவேற்று பதவி அளித்ததன்மூலம் திருநங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

எனக்கு கிடைத்த பதவியை பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபடுவேன். வரும் எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெறும். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள். வந்தவுடன் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள். பேட்ட பேட்டையாக சுற்றிவந்தாலும் நடிகர் ரஜினியால் முதல்வராக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.