கத்திமுனையில் செல்போன் பறித்த 4 பேர் கைது

குற்றம்

சென்னை, ஜன.10:வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவைச்சேர்ந்தவர் பிரசாத் (வயது 18)இவர் கடந்த 6ம்தேதி இரவு 9மணியளவில் இவரது நண்பருடன் அதேபகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் சந்திப்பில் உள்ள செல்போன் கடைக்கு சென்றுள்ளார்

அப்போது கடையில்நின்றிருந்த 4பேரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த நான்குபேரும் சேர்ந்து ஜெகநாதனை தனியாக அழைத்துச்சென்று கத்தி முனையில் அவனிடமிருந்த 2 செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் கொடுத்த புகார் தொடர்பாக ஐசிஎப் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்து பட்டரை வாக்கத்தைச்சேர்ந்த ஐசிஎபில் பணியாற்றும் கார்த்திக் (வயது 23) , வில்லிவாக்கத்தைச்சேர்ந்த கோபிநாத் (வயது23), தினேஷ் (வயது 19), ரெட்டில்சை சேர்ந்த மனோ(வயது 19) ஆகிய 4பேரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.அப்போது இவர்கள் பணியாற்றுக்கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.