ஸ்ரீநகர், ஜன.10:ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் லே பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 8.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்ட போதிலும் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பூமிக்கு அடியில் 34 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 4.6-ஆக பதிவாகி இருந்தது.