சென்னை, ஜன.11: நீதிமன்றத்தின் தடையை மீறி, ரஜினிகாந்தின் பேட்ட, அஜீத்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களும் திரையரங்கில் வெளியான சிலமணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

10 ந்தேதி அதிகாலை ரசிகர்களின் பேராதரவோடு வெளியான நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் நடிகர் அஜீத்குமாரின் விஸ்வாசம் ஆகிய இரு படங்களையும் அடுத்த சில மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் ஆன்லைனில் வெளியிட்டு விட்டது.

மதியம் 2 மணிக்கு பேட்ட படமும், இரவு 7.30 மணிக்கு விஸ்வாசம் திரைப்படம் ஆன்லைனில் வெளியானதாக கூறப்படுகின்றது. இந்த இரு திரைபடங்களையும் இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் பேட்ட மற்றும் விஸ்வாசம் படக்குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த இரு திரைப்படங்களுடன் என்டிஆரின் வாழ்க்கை சரித்திரப் படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.