ஏர்போர்ட்டில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

குற்றம்

சென்னை, ஜன.11: சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயில் இருந்து சென்னை வந்த 4 பயணிகளிடம் நடத்திய சோதனையில் இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப் பட்ட 520 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னையிலிருந்து துபாய் செல்லவிருந்த ஷாஜகானிடம் ரூ.17 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அமெரிக்க டாலர், யூரோ ஹவாலா பணமா என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.