சென்னை,ஜன.11:பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.71.67 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 66.31 ஆகவும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்த விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக எண்ணைய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.