சென்னை, ஜன.11: பொங்கலையொட்டி நேற்று வெளியான ரஜினி, அஜித் படங்களுக்கு இடையே கடும் வசூல் போட்டி நிலவுகிறது. நேற்று ஒரே நாளில் பேட்ட படம் ரூ 1.10 கோடியும், விஸ்வாசம் படம் ரூ.96 லட்சமும் கலெக்ஷன் செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படம் நேற்று வெளியானது. அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படமும் இன்று ரிலீசானது.

இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நாளில் வெளியானதால் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு காட்சிகள் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. ரஜினி படத்திற்கு 60 சதவீத தியேட்டர்களும், அஜித் படத்திற்கு 40 சதவீத தியேட்டர்களும் கிடைத்துள்ளன. இதனால் இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் ஆதரவு பெறுகி வசூலை குவித்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் சென்னை பாக்ஸ் ஆபீசில் மட்டும் பேட்ட படம் ரூ.1 கோடியே 10 லட்சம் கலெக்ஷன் செய்துள்ளது. அதேபோல் அஜித்தின் விஸ்வாசம் படம் ரூ.96 லட்சத்தை ஒரே நாளில் குவித்துள்ளது.

இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு பிடித்துள்ளதால் வருவாய் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேற்றைய வசூல் விவரம் இன்று மாலையில் தெரியவரும்.