தாம்பரம், ஜன.11:தாம்பரத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஜல்லி இயந்திரம் அறுந்து விழுந்ததால் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

பழைய பல்லாவரம், பெரியபாளையத்தம்ன் கோயில் தெருவில் கட்டி ட வேலை நடைபெற்று வருகிறது.இந்த கட்டித்தின் 4 வதுமாடியில் இன்று ஜல்லி போடும் பணி நடைபெற்றது. அப்போது ஜல்லி போடும் இயந்திரம் திடீரென்று அறுந்து விழுந்ததால் அங்கு பணியாற்றி கொண்டிருந்த சேலத்தைச் சேர்ந்த பெரிய கண்ணன் (வயது 25) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான வாலிபரின்உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.