சிட்னி, ஜன.12: சிட்னியில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான முதலாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. முன்னதாக டி20 போட்டிகளில் 1-1 என சமநிலை பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் முதல் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து வருகிறது. துவக்கத்திலேயே கேப்டன் பிஞ்ச் புவனேஷ்குமார் பந்துவீச்சில் 6 ரன்களில் போல்ட் ஆகி அவுட்டானார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கேரி 24 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்து ஆடிய கவாஜா, மார்ஷ் பொறுப்பாக ஆடினர். கவாஜா 59 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார்.

தற்போது ஆஸி அணி 36 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. மார்ஷ் 53 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 31 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.