சென்னை, ஜன.12:  தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையான ரூ.1000-ல் பங்கு தராத மனைவியை, அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை  போலீசார் கைது செய்தனர்.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலையைச் சேர்ந்தவர் ராமர் (வயது 70), இவரது மனைவி ராசாத்தி (65). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசின் பொங்கல் பரிசு பணத்தை ராசாத்தி நேற்று வாங்கி வந்துள்ளார். அதில் பாதியை தனக்கு தர வேண்டும் என்று ராமர் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு வலுத்ததில் ஆத்திரம் அடைந்த ராமர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, மனைவியை வெட்டினார். படுகாயம் அடைந்த ராசாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமரை போலீசார் கைது செய்தனர்.