சென்னை, ஜன.14:தமிழக அமைச்சரவையின் கூட்டம் வருகிற 18-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 2-ந் தேதி கூடியது. அப்போது கவர்னர் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக விவாதித்து முடிவு எடுக்க தமிழக அமைச்சவை கூட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது.

உலக முதலீட்டாளர் மாநாடு 23, 24-ந் தேதிகளில் நடைபெறுகிறது. புதிய தொழில்களை தொடங்க சலுகைகள் அறிவிக்க இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மேலும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.