தலைவர்கள் வாழ்த்து சென்னை, ஜன.14: சு. திருநாவுக்கரசர்: தமிழக காங்கிரஸ் தலைவர்
சு. திருநாவுக்கரசர் வாழ்த்துச்செய்தியில், தமிழர்களின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்ற இந்நன்னாளில் பொங்கல் மற்றும் தைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது சார்பாகவும் மகிழ்வுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜிகே. வாசன்: தமாகா தலைவர் ஜிகே. வாசன் வாழ்த்துச்செய்தில்,தை முதல் பேதங்களும், பிணக்குகளும், மோதல்களும், முரண்பாடுகளும் முழுமையாக மறைந்து, நல்லதே நடந்து, ஏழை, எளிய மக்கள் வாழ்வில் உயர வழி தமிழ் மக்களுக்கும் த.மா.கா சார்பில் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

வைகோ: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்துச் செய்தியில்,கடும்பனி மறைந்து, கதிர் ஒளியின் வெளிச்சத்தில் புதுப்பானை உலை ஏற்றி, புத்துருக்கு நெய் விட்டு, புத்தரிசி உலையில் இட்டு, மங்கை நல்லாளோடும், மக்கட் செல்வங்களோடும் குதூகலித்துக் கொண்டாடும் தமிழர்களுக்கும், தரணிவாழ் தமிழர்களுக்கும், என் இதயம் நிறைந்த இனிய தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டாக்டர் சேதுராமன்: அ. இ. மூ.மு. தலைவர் டாக்டர் சேதுராமன் வாழ்த்துச்செய்தியில்,உலகமெஙகும் தமிழ் பேசும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சமக நிறுவனத்தலைவர் ஏ. நாராயணன்வாழ்த்துச்செய்தியில், உலக தமிழர் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்: அமமுக தலைவர் டிடிவி தினகரன் வாழ்த்துச்செய்தியில், பல்வேறு இன்னல்களையும் தாங்கிக்கொண்டு நாம் பசியாற தொடர்ந்து உண வளிக்கும் விவசாய பெருமக்களை வணங்கிடுவோம் என்றார்.

வேல்முருகன்: தமிழக வாழ்வுரிமை காட்சி தலைவர் வேல்முருகன் வாழ்த்துச்செய்தியில், ஏவப்பட்ட இன்னல்களைப் புறந்தள்ளி எதிர்காலத்தை நமதாக்க, இன்னும் அதிகமாக உழைப்போம் என்று கூறி, உலகெங்கும் வாழும் அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு இன்பத் தைப்பொங்கல் வாழ்த்துக்கள் என்றார்.

அபூபக்கர்: முன்னாள் தமிழக ஹஜ் அசோசியேசன் தலைவர் வாழ்த்துச்செய்தியில், சாதி,மத பேதங்கள், ரசியல் வேறுபாடுகள் நீங்கிஅனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வு பொங்கலைப் போல பொங்கி வரட்டும்.தமிழர்களின் வலிமை, மேன்மை பாரெங்கும் பரவட்டும்.அழிந்து  வரும் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பதற்கு கரம் கோப்போம் என்றார்.

டாக்டர் மைத்ரேயன் வாழ்த்து

நெல்லில் இருந்து உமியை நீக்குவது போலவும், மாசுக்களை நீக்கி மனமார்ந்த மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கிறேன் என்று டாக்டர் மைத்ரேயன் எம்பி கூறி உள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் தலையாய திருநாள் பொங்கல் ஆகும். மஞ்சள், நெல், கரும்பு, வெல்லம், என மங்கலத் தோரணம் எங்கும்விளங்கும் தமிழர் விழா இது. இந்தஆண்டு திருவள்ளுவரின் 2015 ம் ஆண்டு தொடங்குவது கூடுதல் சிறப்பாகும். நெல்லில் இருந்து உமியை நீக்குவது போலவும், மாசுக்களை நீக்கி மனமார்ந்த மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கிறேன். என்று டாக்டர் மைத்ரேயன் எம்பி கூறியுள்ளார்.