அடிலெய்டு, ஜன.14: ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு விஷயத்தை மாற்றியே ஆக வேண்டும் என்று இந்திய வீரர் ரோஹித் சர்மா தீவிரம் காட்டி வருகிறாராம்.

இது குறித்து அவர் கூறுகையில், இதுவரை நான் ஆஸ்திரேலியாவில் சதமடித்த அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணி தோற்றுவிட்டது. 2015-ல் ஆஸ்திரேலியாவில் முதல் சதமடித்தேன்.

இந்த போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டது. பின்னர், 2016-ல் 2 சதங்கள் அடித்த, 2 போட்டிகளிலுமே இந்திய அணி தோற்றுவிட்டது. அதேபோல், நான் சதமடித்த சமீபத்திய சிட்னி போட்டியிலும் இந்திய அணி தோல்விகண்டது. இந்த நிலையை மாற்றி, நான் சதமடித்தால் அணி வெற்றி பெற வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும், என்றார்.