சென்னை, ஜன.16: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இன்று பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல் கூறியதாவது:-

மக்கள் முன் வைக்கும் பிரச்சனைகளுக்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவித்துவிட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. இளைய தலைமுறையினர் இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியலை மாற்றி அமைக்க தயாராக உள்ளனர்.

மக்கள் மத்தியில் ஓட்டுப்போடுவதற்கான விழிப்புணர்வை நாம் உருவாக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா? என்பதை கட்சிதான் முடிவு செய்யும். இவ்வாறு கமல் பேட்டியளித்தார்.