புதுடெல்லி, ஜன.17: பிஜேபி தலைவர் அமித்ஷாவுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அமித்ஷாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தனி அறையில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது அமித் ஷாவின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், சிகிச்சை முடிவடைந்த பின்னர் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.