சென்னை, ஜன.17: பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன.

கடந்த 9-ந் தேதி வரை பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 10-ந் தேதி ஏறுமுகத்தை கண்ட பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்துள்ளது. நேற்று மட்டும் பெட்ரோல் விலை உயராமல் 8 காசுகள் குறைந்தது. ஆனால் டீசல் தொடர்ந்து உயர்ந்தது. இந்த நிலையில், இன்று 7-வது நாளாக டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. பெட்ரோல் விலையும் இன்று 15 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது.

இதன்படி, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.15 காசுகளாகவும், டீசல் விலை ரூ.68.42 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.