குடும்பத்தையே கத்தியால் குத்திய கொடூரன்

இந்தியா

புதுடெல்லி, ஜன.18: குடும்பத்தையே கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டவனை தடுக்க முயற்சிக்காமல் செல்போனில் மக்கள் வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு டெல்லியில் உள்ள கியாலா என்ற பகுதியைச் சேர்ந்த முகமது ஆசாத்துக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் சுனிதாவுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. தகராறு முற்றிய நிலையில் கத்தியுடன் சென்ற முகமது ஆசாத், சுனிதாவை யும், அவரது கணவர் வீரு, மகன் ஆகாஷ் ஆகியோரையும் சரமாரியாக குத்தினான்.

சுனிதா உயிரிழந்து விட, வீருவும், ஆகாசும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்த முற்படாமல் செல்போனில் வீடியோ படம் பிடித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள இந்த வீடியோ கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.