மெல்போர்ன், ஜன.18:  தோனி-ஜாதவ் ஆகியோரின் நிதான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியாவின் அதனின் சொந்தமண்ணில் தோற்கடித்து ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.  இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி சதம் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் இன்று மெல்போர்னில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், விக்கெட் கீப்பர் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற வைத்தனர். 5 பந்துகளில் ஒரு ரன் தேவை என்ற திக் திக் நிமிடங்களில் கேதர் ஜாதவ் 4 அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதன்மூலம், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.