அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து உள்ள படம் ‘சார்லி சாப்ளின் – 2. இப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாகவும், நிக்கி கல்ராணி மற்றும் அதா சர்மா ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசையமைக்க சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சக்தி சிதம்பரம் இயக்கி உள்ளார்.

படம் பற்றி இயக்குனர் கூறுகையில், பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார். நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு டாக்டராகவும், அதா சர்மா மனோதத்துவ நிபுனராகவும் நடிக்கிறார்கள். கிராமப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் யூ டியூப்பில் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. லட்சக் கணக்கில் டப் மேஷ் உருவாக்கப் பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு கோவா கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. படம் இம்மாதம் 25 ம் தேதி வெளியாகிறது என்றார்.