புதுச்சேரி, ஜன.19: புதுச்சேரியில் கல்லூரி பேராசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட மும்பை மாணவி வீடியோ ஆதாரத்துடன் டீனிடம் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதால் கல்லூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
புதுச்சேரி குருவாம்மாள் பேட்டை பகுதியில் கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில் புதுøவை மற்றும் வெளிநாட்டிலிருந்தும் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கு கல்லூரியின் பின்பக்கத்தில் விடுதி அமைத்து கொடுத்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் தங்கி உள்ளனர்.சிலர் வெளியில் இருந்து வந்து செல்கின்றனர். இந்த விடுதியில் தங்கி பயயின்று வரும் மாணவி இன்று காலை கல்லூரி டீனிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- விடுதியில் தங்கி பேராசிரியராக பணியாற்றி வருபவர் உத்திர
பிரதேசத்தைச்சேர்ந்த திவானி (வயது 55). இவர் தனக்கு பாலியல்தொல்லை கொடுத்து வருகிறார். இதுகுறித்து நான் அவரிடம் கூறியும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இதுகுறித்து சக மாணவிகளும் வீடியோ ஆதாரத்தை கல்லூரி டீனிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து கல்லூரி டீன் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆதாரத்தை பெற்றுக்கொண்டு பேராசிரியரை வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர் மீது கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் காட்டூ தீ போல் பரவியதால் புதுச்சேரி கால்நடை மருத்துவ கல்லூரி முழுவதும் பெரும் பரபரப்பாக உள்ளது.