பம்பை, ஜன.19: சபரிமலை செல்ல முயன்ற ஐம்பது வயதுக்குட்பட்ட 2 பெண்கள் போலீஸாரால் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ரேஷ்மா மற்றும் ஷாலினா ஆகிய இரு பெண்களும் ஒரே மாதத்தில் இருமுறை சபரிமலை செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஏற்கனவே இம்மாத துவக்கத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இம்முறை 6 ஆண்களும் அவர்களுடன் உடனிருந்தனர். ஆனால் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாவும், பாதுகாப்பு தரமுடியாது என கூறி கேரள போலீஸார் எச்சரித்து அவர்களை நிலக்கல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர்.