2 பேருந்துகள் மோதல்: 22 பேர் உயிரிழப்பு

உலகம்

லா பஸ், ஜன.20: பொலிவியாவில இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயமடைந்தனர்.

தலைநகர் லா பஸ்ஸில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சல்லபட்டா. இங்கு இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது.

காயம் அடைந்தவர்களில் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்
சேர்க்கபட்டுள்ளனர் என்று சல்லபட்டா மேயர் தெரிவித்துள்ளார்.