கொல்கத்தா, ஜன.20:கொல்கத்தாவில் நடந்த எதிர்கட்சிகள் பேரணியில் கலந்து கொண்டு விட்டு இன்று சென்னை திரும்பிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது திருச்சியில் விசிக சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பிதழை வழங்கினார்.

மக்களவை தேர்தல் கூட்டணி குறித்தும் கொல்கத்தாவில் எதிர்கட்சிகள் நடத்திய பேரணிக்கு மக்களிடம் ஏற்பட்ட ஆதரவு குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. கொல்கத்தா பேரணியில் ஸ்டாலின் நிகழ்த்திய உரைக்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்தார்.