சிதம்பரம் ஜன. 21: கடலூர் மாவட்டம் வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபை உள்ளது இதில் 148வது தைப்பூச திருவிழா 20 1 2019 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் ராமலிங்க அடிகளார் பிறந்த மருதூரில் உள்ள அவரது வீட்டிலும் அருகே உள்ள கருங்குழி என்ற இடத்தில் ராமலிங்க அடிகளார் தண்ணீரால் விளக்கேற்றிய இடத்திலும் கொடி ஏற்றப்பட்டது முக்கிய திருவிழாவான தைப்பூச ஜோதி தரிசன விழா 21 1 2019 அன்று வடலூரில் உள்ள சத்திய ஞான சபை வளாகத்தில் நடைபெற்றது .இதில் காலை 6 மணிக்கு திரையை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது பின்பு காலை 10 மணிக்கும் அதன் பிறகு மதியம் ஒரு மணிக்கு இரவு 7 மணிக்கும் அதன் பிறகு இரவு 10 மணிக்கும் அதன் பிறகு 22 1 2019 அன்று காலை 5 மணிக்கு மொத்தம் ஆறு கால ஜோதி தரிசன ஆறுகால பூஜைகள் ஏழு முறை திரையை விலக்கி தரிசனம் நடைபெறுகிறது.

இந்த ஜோதி தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர் மேலும் வடலூரில் நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சரவணன் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் வடலூர் தைப்பூசம் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் வடலூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைப்பது திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கடலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வடலூரில் ஜோதி தரிசனத்திற்கு பக்தர்கள் வருவதற்கு 200க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது மேலும் வடலூரில் நடைபெற்ற தைபூச தரிசன விழாவில் தமிழக அமைச்சர் எம் சி சம்பத் மற்றும் கடலூர் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனத்தை கண்டுகளித்தனர் மேலும் வடலூரில் ஜோதி தரிசனத்தை முன்னிட்டு நடைபெற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவில் தமிழக அமைச்சர் சம்பத் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மேலும் வடலூருக்கு அதிக அளவில் சாரைசாரையாக பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர் வடலூரில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை வசதி ஆகியவற்றை வடலூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் செய்துள்ளனர் குறிப்பு மேற்கண்ட செய்திக்கான புகைப்படங்கள் உள்ளது…