வேலூர் ஜன.21: ஆம்பூர் அருகே பிளஸ் 1 படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக லாரி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த 10-ந் தேதி வீட்டின் அருகாமையில் இருந்து கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.