சென்னை, ஜன.21:வீதி விருது விழா என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், சர்ச்சைக்குரிய ஓவியங்கள் இடம் பெற்ற விவகாரத்தில் லயோலா கல்லூரி மன்னிப்பு கேட்டுள்ளது.

அந்த ஓவியங்கள் தங்களுக்கு உடன்பாடானவை அல்ல என்றும் அவற்றை அகற்றி விட்டதாகவும் லயோலா கல்லூரி தெரிவித்துள்ளது.

முன்னதாக தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் இது பற்றி புகார் அளிக்கப்பட்டது. வீதி விருது விழா என்ற பெயரில் பாரத மாதா, பெண்கள் மற்றும் இந்து மத கடவுள்கள் இழிவுபடுத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

இது தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகவும்,இந்த நிகழ்ச்சியை நடத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்ட லயோலா கல்லூரி மற்றும் ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கேட்டு கொண்டிருந்தார்.

இதே போல டிஜிபி அலுவலகத்தில் பிஜேபியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.