விழுப்புரம்,ஜன.21:விழுப்புரம் மாவட்டத்தில் மதுபானம் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வருகிற 25-ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில், வருகிற 25-ம் தேதி காலை 9 மணிக்கு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. வாகன ஏலம் கேட்பவர்கள் 2000 ரூபாய் முன் வைப்பு கட்டண தொகையாக செலுத்த வேண்டும். ஏலம் எடுத்த பின், ஏலத் தொகையில் 25 சதவீதத்தை உடனடியாக செலுத்த வேண்டும்.

அப்படி செலுத்தும்போது முன் வைப்பு தொகை அதில் சரி செய்யப்படும். ஏலம் எடுத்த 20 நாட் களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தி வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும். தவறினால், அந்த வாகனம் மறு ஏலம் விடப்படும். ஏலத்தில் பங்கேற்று வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணம் ஏலத்தின் முடிவில் திருப்பி கொடுக்கப்படும். ஏலம் கேட்டு வாகனங்களை எடுத்து செல்லாத ஏல தாரர்கள் மறு ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.