மதுரை, ஜன.21:மதுரையில் தைப்பூச தெப்ப திருவிழாவையொட்டி மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலையில் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு மாரியம்மன் கோயில் தெப்பக் குளத்தை சென்றடைந்தார்.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை இரண்டு முறை சுற்றி வலம் வந்தார். மாலையில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தி உலாத்துதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மன் இரவும் தெப்பத்தை வலம் வந்தார். இந்தநிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.