சென்னை, ஜன.22:  என் கட்அவுட்டிற்கு அண்டா, அண்டாவாக பாலபிஷேகம் செய்ய வேண்டும் என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு கட்டளையிட்டுள்ளார். நடிகர் சிம்பு இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன். அதில் என்னுடைய ரசிகர்கள் யாரும் பேனர் வைத்து கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் அம்மாவிற்கு புடவையோ, அப்பாவிற்கு  சட்டையோ எடுத்துக்கொடுத்தால் சந்தோஷப்படுவேன் என கூறியிருந்தேன்.

இதற்கு ஒரு சிலர், இரண்டு, மூன்று ரசிர்களை வைத்துள்ள இவர் அறிவுரை கூறுவதா என கிண்டல் செய்துள்ளனர்.  நான் அதற்கு தகுதியானவனா என்பது தெரியவில்லை. எனக்காக உள்ள அந்த 2, 3 ரசிகர்களுக்கு நான் ஒரு அன்புக் கட்டளையிடுகிறேன். எப்போதும் இல்லாத அளவிற்கு பிரமாண்ட கட்அவுட்கள், பிளக்ஸ் பேனர்களை வைக்க வேண்டும். கட்அவுட்டிற்கு பேக்கெட் கணக்கில் இல்லாமல் அண்டா கணக்கில் பால் ஊற்ற வேண்டும். வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்தை வேற லெவலில் கொண்டாட வேண்டும். இதுவே என் அன்புக்கட்டளை என்று தெரிவித்துள்ளார்.