ரஜினியின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது: சேரன்

சினிமா

சேரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திருமணம்’. இதில் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். காவியா சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சுகன்யா, தம்பிராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைக்க, பொன்னுவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதற்காக அழைப்பிதழை திருமண பத்திரிகை போன்றே சேரன் வித்யாசமாக வடிவமைத்து அனைவருக்கும் கொடுத்திருந்தார். மேள தாளம் முழங்க இசை விழா திருமணம் போல் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரும் பட்டு வேஸ்டி, பட்டு புடவையுடன் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சேரன் பேசியதாவது:- பொருளாதாரம் தான் இன்று வாழ்க்கையை தீர்மானிக்கிறது. அனைத்து உறவிகளின் சிக்கல்களும் அதில்தான் உருவாகின்றன. அதை தவிர்ப்பது எப்படி என்பதை இந்த படத்தில் சொல்லி உள்ளேன். ரஜினி எனக்கு பிடிக்க காரணம் இயக்குனர் மகேந்திரன் தான். ரஜினியின் ஸ்டைல் எனக்கு பிடிக்காது. அவரது நடிப்பு பிடிக்கும். மகேந்திரன் படங்களில் மட்டும் தான் ரஜினியை நடிகராக பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.