வரும் 24, 25-ம் தேதியில் அம்மாவின் தரிசனம்

சென்னை

சென்னை, ஜன.22:  மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகிறார். வரும் 24, 25-ம் தேதிகளில் விருகம்பாக்கத்தில் தங்கியிருந்து ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.
உலகளவில் புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவரும், மனிதாபிமான செயற்பாட்டாளருமான ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி (அம்மா) வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சென்னைக்கு வருகைத் தருகிறார். திருவனந்தபுரத்திலிருந்து ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய அம்மாவின் வருடாந்திர இந்திய சுற்றுலாப் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைகிறது.

சென்னை, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் அம்மா தங்கியிருக்கும் இரு நாட்களிலும் ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்குகிறார். அத்துடன் பஜனைப் பாடல்களைப் பாடுவதிலும், தியானம் செய்வதிலும் மற்றும் மனச பூஜையை நடத்துவதிலும் பக்தர்களை வழிநடத்துவார். இந்நிகழ்வுகளுக்கு வருகைதரும் ஒவ்வொருவருக்கும் அம்மா ஆசி வழங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை அமர்தானந்தமயி ஆஸ்ரம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.