ஜி வி பிரகாஷ்- ரைசா நடிக்கும் புதிய படம்

சினிமா

ஆரா சினிமாஸ் நிறுவனம் தற்போது அதர்வா -ஹன்சிகா நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்.100 என்றப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது ஜி வி பிரகாஷ், ரைசா வில்சன் ஜோடியாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஒரு புதிய படத்தை நேற்று சென்னையில் பூஜையோடு துவங்கி உள்ளனர். குறும் படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ் , அவர் இயக்கி உள்ள விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, சிவா எடிட்டிங் மேற்கொள்கிறார். கமலநாதன் கலை அமைக்க, இசையமைக்கும் பொறுப்பையும் ஜி வி பிரகாஷே ஏற்றுள்ளார்.