புகழ் பெற்ற பட நிறுவனமான ஏவிஎம் மீண்டும் புதிய படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ‘யானை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஹரி இப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை தயாரித்து வெளியிட்ட நிறுவனம் ஏவிஎம். ஏ.வி.எம். போன்ற சில ஸ்டூடியோக்களான ஜெமினி, விஜயா வாகினி போன்ற ஸ்டுடீயோக்கள் எல்லாம் எப்போதோ மூடு விழாக்கள் கண்டுவிட்டது. ஆனால், ஏ.வி. எம். ஸ்டுடியோ மட்டும் இன்னும் நிலைத்து நிற்கிறது.

ரஜினி நடித்த சிவாஜி, சூர்யா நடித்த ‘அயன்’ படங்களை தயாரித்தது. சில ஆண்டுகளாகப் படங்களைத் தயாரிக்கவில்லை.இப்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளனர். வெற்றிக் கூட்டணியான சூர்யா மற்றும் ஹரி காம்போவில் ஒருப் படத்தை ஏ.வி.எம். தயாரிக்க உள்ளது.

இப்படத்திற்கு ‘யானை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.