மஹா படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் நடித்தபோது நடிகை ஹன்சிகாவுக்கு காயம் ஏற்பட்டது.

மஹா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. யு.ஆர்.ஜமீல் இப்படத்தை இயக்கி வருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் வேகமாக வசனத்தை பேசிக்கொண்டே அவர் சண்டைக் காட்சியில் ஈடுபடும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது திடீரென்று அவர் தவறி விழுந்தார். இதனால் கையிலும், முட்டியிலும் அடிபட்டது. லேசாக ரத்தமும் கசிந்தது.

இதனைப் பார்த்ததும் இயக்குனர் முதல் படக்குழுவினர் அனைவரும் பதற்றம் அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நாளை தொடரலாம்..நீங்கள் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்று இயக்குனர் கூறின õர். ஆனால், ஹன்சிகா அதனை ஏற்கவில்லை. தொடர்ந்து காட்சிகளை படம்பிடித்து விடலாம் என்று அவர் கூறினார். கையில் சிறிய பேண்டேஜ் மட்டும் போட்டுக்கொண்டு அவர் அந்த காட்சியை நடித்து முடித்தார்.