சென்னை, ஜன.23:இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் வரும் 25 மற்றும் 26-ந் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என்றும், பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.