தைபே, ஜன.23: தாய்வானைச் நாட்டைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஜிஜிவூ. இவர் நீச்சல் உடையில் மலைகள் மீது ஏறி அதன் உச்சியில் அமர்ந்து செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிடுவதில் ஆர்வம் கொண்டவர்.

இதனால் ஜிஜிவூ மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில் தாய்வானில் உள்ள யுஷான் தேசிய பூங்கா பகுதியில் உள்ள மலை சிகரத்தில் ஏறி ‘பிகினி’ நீச்சல் உடையில் எடுத்த செல்பியை வெளியிட்டார். அப்போது கால் தவறி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.

பலத்த காயம் அடைந்த அவர் அதை போன் மூலம் பிறருக்கு தகவல் தெரிவித்தார். இந்த செய்தியை அறிந்து அவரை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்தும்போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை.