பாரிஸ், ஜன.23: அமெரிக்க பாடகர் கிரிஸ் பிரவுன் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு விடுதி ஒன்றில் வைத்து 24 வயது பெண் ஒருவரை கிரிஸ் பிரவுன் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “நானும் கிரிஸ் பிரவுனும் இரவு விடுதி ஒன்றில் சந்தித்தோம்.

அதன் பின்னர் நானும் எனது தோழி ஒருவரும் ஆடம்பர தங்குமிடம் ஒன்றில் சந்தித்தோம்.அப்போது கிரிஸ் பிரவுன் என்னை அத்துமீறி பலியல் பலாத்காரம் செய்தார். அவருடன் அவரது நண்பர் மற்றும் மெய்க்காப்பாளரும் என்னை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர்” என குறிப்பிட்டார்.

இந்த புகாரையடுத்து அவர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிஸ் பிரவுன் பிரபல பாடகி ரிஹானாவின் முன்னாள் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.