அங்காரா, ஜன.23: குடும்ப தகராறு காரணமாக பெற்ற மகளை கசாப்பு கடைக்காரர் ஒருவர் துண்டுதுண்டாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டில் வசிப்பவர் ஹசன். இவரது மகள் திமென். இவர் ஒரு நடனக்கலைஞராவார். ஹசன் கறிக்கடை நடத்தி வருகிறார், ஹசன் அப்பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தந்தை மகளுக்கிடையே சமீபத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில கோபம் தலைக்கேறிய ஹசன் , மகள் என்றும் பாராமல் அவரை துண்டு துண்டாக வெட்டியதில் திமென் உயிரிழந்தார்.