ஸ்ரீஹரிகோட்டா, ஜன.24: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி யைமத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதில் மைக்ரோசாட் ஆர் என்ற இமேஜிங் செயற்கைக்கோள் மற்றும் கலாம்சாட் என்ற 10 செ.மீ கியூப் வடிவிலான மாணவர்கள் வடிவமைத்த செயற்கைக்கோளும் செலுத்தப்பட உள்ளது.

ஹாம் ரேடியோ சேவைக்காக கலாம்சாட் செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இதேபோல் புவியை கண்காணிக்கும் நோக்கில் மைக்ரோசாட்-ஆர் அனுப்பப்படுகிறது. இதற்கான 28 மணி நேர கவுண்ட்டவுன்,நேற்றிரவு 7.37 மணிக்கு தொடங்கியது.

பிஎஸ்எல்வி-சி44 ராக்கெட் ஆனது, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்றிரவு 11.37 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 740 கி.கி எடை கொண்ட மைக்ரோசாட்-ஆர் என்ற செயற்கைக்கோள் 277 கி.மீ சுற்றளவு கொண்ட வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.