புளோரிடா,ஜன.24:அமெரிக்காவில்உள்ள வங்கியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்த நடத்திய துப்பாக்கிச்சூட்டில 5 பேர் உயிரிழந்தனர்.

புளோரிடாவில் உள்ள செப்ரிங் என்ற நகரில் இயங்கி வரும் வங்கி ஒன்றிற்குள் திடீரென நுழைந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்ற மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.