சண்டிகர், ஜன.24: அரியானாவில் அதிகாலை நேரத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.

அரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் 8 பேர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் 4 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கட்டிடம் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

கட்டிட இடிபாடுகளில் 8 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.