சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் 2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 “ உருவாகி வருகிறது.

இதில் சசிகுமார் – அஞ்சலி நடித்துள்ளனர். மேலும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை அமைக்க, ரமேஷ் எடிட்டிங் மேற்கொள்கிறார்.

விரைவில் இசை வெளியீட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நாடோடிகள் முதல் பாகத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அனைனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சசிகுமார் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ என்ற படத்தில “நடித்து வருகிறார்.