கைதிகளிடமிருந்து போதை மாத்திரைகள் பறிமுதல்

குற்றம்

செங்குன்றம், ஜன.25: புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்து வரப்பட்ட குற்றவாளி ஒருவரிடம் நடந்த சோதனையில், 40 போதை மாத்திரைகள், 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அரும்பாக்கத்தில் கடந்த 23-ம் தேதி நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, கார்த்திக் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரை, புழல் ஜெயிலில் அடைப்பதற்கு நேற்றிரவு அழைத்து சென்றிருந்தனர்.

அப்போது, சிறையின் பிரதான நுழைவு வாயிலில் நின்றுக்கொண்டிருந்த சிறை கண்காணிப்பாளர்கள் கார்த்திக்கை சோதனையிட்டனர். அப்போது, அவர் வைத்திருந்த 40 போதை மாத்திரைகள் மற்றும் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து, புழல் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.