சென்னை, ஜன.26:சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிகம்பத்தில் தேசிய கொடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றி மரியாதை செலுத்தினர்.
70-வது குடியரசு தினம் இன்று சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மெரினாவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த கவர்னர், முப்படை அதிகாரிகளுடன் மரியாதை செலுத்தினார். காலை 7.45 மணியளவில் காமராஜர் சாலையில் குடியரசு தினவிழா காண கூடியிருந்த மக்களுக்கு காரில் இருந்தபடியே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இதனையடுத்து 7.50 மணியளவில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த கவர்னர், சென்னை காமராஜர் சாலையில் இரு புறங்களிலும் கூடியிருந்த மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதன் பின்னர் குடியரசு தின விழா நடக்கும் இடத்துக்கு வருகை கவர்னரை முதல்வர் எடப்பாடி பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் தலைமைச் செயலாளர் கவர்னரை வரவேற்றனர். இதனையடுத்து, அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அலங்கார ஊர்திகள் அணி வகுத்து வந்தன. ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துவப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.